சுவிட்சர்லாந்தின் சுவிஸ் விமான சேவை நிறுவனம் வட அமெரிக்காவிற்கான பயணங்களை வித்தரிக்க திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வட அமெரிக்காவின் இரண்டு பகுதிகளுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க உள்ளது.
சூரிச் – வாஷிங்டன் டிசிக்கு இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் முதல் சூரிச் – டொரன்டோ நகரங்களுக்கு இடையில் விமானமொன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பாவின் மூன்று இடங்களுக்கு சேவை விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்லோவாக்கியா மற்றும் ரோமானியா ஆகியனவற்றுக்கு வாராந்தம் மூன்று விமான சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.