சுவிட்சர்லாந்தின் கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1950 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கத்தோலிக்க தேவாலய மதகுருமார் தேவாலய உறுப்பினர்கள் போன்றவர்களினால் இந்த துஷ்பிரயோக குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சூரிச் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளது என பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டி உள்ளது.
எனினும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பல இடம்பெற்று இருக்கலாம் எனவும் மிகக் குறைந்த அளவு சம்பவங்களே பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் 74 வீதமானவர்கள் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தோலிக்க தேவாலயங்களில் இடம் பெற்று வந்த பாலியல் குற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் மௌனம் காக்கப்பட்டு வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மட்டுமின்றி ஏனைய பல நாடுகளிலும் இவ்வாறு குற்றச்செயல்கள் வெளிக்கொணரப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.