சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பார்க்கிங் அல்லது வாகன தரிப்பு வசதிகளைக் கொண்ட பகுதிகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ப்ளூ ஸோன் அல்லது நீல வலயம் என அழைக்கப்படும் ஒரு மணித்தியால வாகன தரிப்பு வசதிகளை கொண்ட பார்க்கிங் பகுதிகள் வரையறுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான வாகன தரிப்பு வசதிகள் அகற்றப்பட்டு அவற்றில் சைக்கிள் வீதிகள் மற்றும் பாதசாரிகள் நடப்பதற்கான நடைபாதைகள் என்பன அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆண்டுகளில் வாகன தரிப்பு வசதிகள் குறைக்கப்பட்டு இவ்வாறு சைக்கிள் பயணம் செய்வதற்கான வீதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை குறித்து வர்த்தகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் தீர்மானத்தை மேல் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கையை விடுத்துள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் அதிக தேவையுள்ள தொழில் துறைகள் எவை தெரியுமா.?
எனினும் இந்த கோரிக்கை வெற்றிய அளிக்க கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் வர்த்தக நிறுவனங்கள் சில நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
Source:-Tamilinfo