சுவிட்சர்லாந்தில் உருவாகப்போகும் பாதை வலையமைப்புக்கள் சுவிட்சர்லாந்தில் பாதை வலையமைப்புக்கள் விஸ்தரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதைகளில் நிலவி வரும் வாகன போக்குவரத்து நெரிசல் நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு புதிய பாதைகளை அமைக்கவும், ஏற்கனவே காணப்படும் பாதைகளை பராமரிக்கவும் தீர்மானித்துள்ளது.
பாதை விஸ்தரிப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்திற்காக சுமார் 11.6 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் முதலீடு செய்யப்பட உள்ளது. தேசிய பாதைகளில் சுமார் 20 வீதமானவை அடிக்கடி நெரிசல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாதை அபிவிருத்தி திட்டத்திற்கு சில சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஏனெனில் இவ்வாறு பாதைகளை அபிவிருத்தி செய்வதனால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் எதிர்ப்புகள் இல்லாத பட்சத்தில் எதிர்வரும் 2030ம் வருடத்திற்குள் மிக அவசரமாகத் தேவைப்படும் சில முக்கியமான பாதைகள் சீரமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 4 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் கொண்ட இந்த ஐந்து திட்டங்களும் அடுத்த நான்கு ஆண்டுகளில் கட்டுமானத்திற்கு தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:
A1 Wankdorf BE – Schönbühl BE
A1 Schönbühl BE – Kirchberg BE
A1 Rosenbergtunnel in St. Gallen,
A2 Rheintunnel in Basel
A4 Fäsenstaubtunnel in Schaffhausen
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
More About This Article