சுவிட்சர்லாந்தில் வறட்சி தொடர்பில் எச்சரிக்கை – விவசாயிகள் அச்சம் சுவிட்சர்லாந்தில் வறட்சி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் சுவிட்சர்லாந்து மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்து பகுதிகளில் இவ்வாறு வறட்சி ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ரிக்கினோ கான்டனுக்கு இந்த குளிர்காலத்தில் வழமையாக கிடைக்கும் மழையின் அளவில் அரைவாசி மழையே பெய்துள்ளது.

கடந்த கோடை காலத்தில் ரிக்கினோ கான்டனில் மிக மோசமான வறட்சி நிலைமை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மழை பெய்யாத காரணத்தினால் தங்களது பயிர்ச் செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மழையற்ற காலநிலையினால் நிலத்தடி நீரின் அளவு குறைந்துள்ளதாக தென் சுவிட்சர்லாந்து பிரேயோக விஞ்ஞான மற்றும் கலை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.