சுவிஸ் சூரிச் தமிழர் வீட்டில் பிரபாகரன் மகள் துவாரகா.? உண்மை என்ன.? கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக ஊடகங்களில் பேசு பொருளாக இருக்க கூடிய ஒரு விடயம் பழ.நெடுமாறன் அவர்களால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பற்றியதாகவே இருக்கிறது.
பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதிப்போரில் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறார் என்று இன்றல்ல கடந்த 2009 இல் இறுதி யுத்தம் முடிவு பெற்றதில் இருந்தே ஆணித்தரமாக குறிப்பிட்டு வரும் நபர்களில் முக்கியமானவர்.

ஆனால் குறிப்பாக தற்போது ஊடகவியளாளர்களை அழைத்து பிரபாகரன் அனுமதியோடு இதை உறுதிப்பட சொல்வதாக குறிப்பிட்டு தலைவர் உயிருடன் நலமாக இருக்கிறார் அவரது குடும்பம் நலமாக இருக்கிறது விரைவில் வெளிப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்..
அது பற்றிய அத்தனை விடயங்களையும் நீ;ங்கள் அறிந்திருப்பீர்கள். அதையொட்டி இலங்கை ராணுவத்தளபதி மறுப்பு அறிக்கை வெளியிட்டதும்.. தளபதி கருணா அம்மான் மறுப்பு தெரிவித்திருந்ததும் ஊடகங்களில் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது..
அது மட்டுமல்ல தமிழக ஊடகங்கள் பல இதனை ஊதிப்பெருப்பித்து மிகப்பெரிய பேசுபொருளாக விவாதப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
இது இப்படியிருக்க கடந்த மாதம் நாம் ஒரு செய்தியினையும் வெளியிட்டிருந்தோம். அது சுவிற்சர்லாந்தில் தலைவர் உட்பட அவரது மகள் துவாராக உயிருடன் இருப்பதாகவும் இவர்களது மருத்துவ செலவுகளுக்காக பெருமளவு நிதி திரட்டப்படுவதாகவும் தகவல்கள் அரசல் புரசலாக பரவி இருந்தது.

அப்போது அது உறுதிப்படுத்தப்படாத நிலையில் தற்போது முன்னாள் போராளி ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. என்ன விடயம் என்றால் சுவிற்சர்லாந்தில் தலைவர் இருக்கிறார் என்றும் அவரது மகள் துவாராக இருக்கிறார் என்றும் நிதி திரட்டப்பட்டது உண்மைதான் என சுவிசில் வசிப்பவர் என நம்பப்படும் Sathis என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் வழங்கிய உரையாடல் மூலமாக அது நிரூபணமாகியிருக்கிறது. சுவிசில் தலைவர் உயிருடன் இருக்கிறார் என நிதி (மோசடி) திரட்டப்படுகிறது எனவும் அதை நம்பி பலர் பல லட்சங்களை வாரி வழங்கியதும் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அப்துல்லா என்பவரும் இதன் பின்புலத்தில் இருந்து பெருமளவு பண மோசடியில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட அவர் தலைவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் இறுதி யுத்தத்தில் நான் தலைவருடன் நின்றவன் என முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டத்தில் நடந்த விடயங்கள் பற்றியும் விபரித்துள்ளார்.
சுவிசில் தலைவர் பெயரை சொல்லி பணம் அறவிட்டு வருபவர்களிடம் பணம் கொடுத்தவர்கள் ஆதாரத்தை காட்டும்படி நெருக்கம் கொடுக்கவே அவர்கள் முகம் மூடப்பட்ட ஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து தலைவர் மகள் துவாராக எனவும் உங்களிடம் பணம் பெற்று நாங்கள் ஏமாற்றவில்லை எனவும் குறிப்பிட்டதாக அந்த போராளி மேலும் தெரிpவத்தார்.

சுவிற்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள ஒரு தமிழர் வீட்டின் கதவை தட்டிய குறித்த நபர்கள் முகம் மூடிய அந்த பெண்ணுடன் வந்து இவ்வாறு தெரிவித்திருந்ததாகவும் முன்னாள் போராளியான Sathis குறிப்பிட்டிருந்தார்.
எனவே தலைவர் பிரபாகரன் அவராக நேரில் வரும் வரை அவர் தொடர்பாக வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். முக்கியமாக சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்கள் தலைவர் பெயரை சொல்லி பணம் பறிக்கும் இவ்வாறான ஆசாமிகளிடம் இருந்து அவதானமாக இருக்குமாறும் எமது ஊடகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.