பிரான்ஸில் ஓடும் ரயிலில் மனைவிக்கு கணவன் செய்த அதிர்ச்சி செயல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, தனது மனைவியை ஓடும் ரயிலில் இருந்து நபர் ஒருவர் தள்ளி விழுத்தியுள்ளார்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை Val-de-Marne மாவட்டத்தில் உள்ள Créteil-Pompadour தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. காலை 6.40 மணி அளவில் குறித்த நிலையத்தில் இருந்து RER D தொடருந்து பயணிக்க தயாரானபோது, நபர் ஒருவர் தனது மனைவியை தொடருந்தில் இருந்து தள்ளி விழுத்தியுள்ளார்.

தண்டவாளத்தில் விழுந்த மனைவியில் கால் மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.