பிரான்ஸில் போராட்டங்கள் – சுவிஸ் நாட்டுக்கான ரயில் சேவை பாதிப்பு சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் காரணமாக இவ்வாறு பிரான்-சுவிஸ் அதிவேக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரையில் இவ்வாறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் பாரிஸ் நகரிற்கும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா, லாவுசன், சூரிச் மற்றும் பேசல் நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
Source:- Tamilinfo