சுவிட்சர்லாந்து அரசுக்கு உக்ரைன் ஏதிலிகள் விடுத்த கோரிக்கை.!! சுவிட்சர்லாந்தில் கூடுதல் தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு உக்ரைன் ஏதிலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரேய்னிலிருந்து சுவிட்சர்லாந்து வருகை தந்துள்ள ஏதிலிகளில் அதிகமானவர்கள் ஆங்கில மொழி தெரிந்தவர்கள் என்பதுடன் தொழில் கற்கை நெறிகள் பூர்த்தி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரேய்ன் ஏதிலிகள்
கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் 70000த்திற்கும் மேற்பட்ட உக்ரேய்ன் ஏதிலிகள் சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசித்துள்ளனர். சுமார் இரண்டாயிரம் உக்ரேய்ன் ஏதிலிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.