லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் கார் விபத்து – சுமார் 12,000 பிராங்குகள் சொத்து சேதம்.! – லுசேர்ன் / Luzern மாகாணத்தில் சுய விபத்து ஒன்று ஏற்பட்டு காருக்கு பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை மாலை A2 நெடுஞ்சாலையில் குறித்த விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீட்பு மற்றும் துப்புரவு பணிகள் காரணமாக தற்காலிகமாக போக்குவரத்து பாதிக்கபட்டிருந்தமை காணமுடிந்தது.
வடக்கில் A2 நெடுஞ்சாலையில் செவ்வாய்கிழமை மாலை (டிசம்பர் 27, 2022, 5:15 p.m.) குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரெய்டன் அருகே லாங்னாவ் என்ற இடத்தில், 26 வயதுடைய நபர் ஒருவர் பிரேக் போட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்தது.
லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் கார் விபத்து – சுமார் 12,000 பிராங்குகள் சொத்து சேதம்.!
வாகனம் சறுக்கி மத்திய தடுப்பில் மோதியது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மொத்த சொத்து சேதம் சுமார் 12,000 பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.