சுவிஸில் போதைக்காக மாத்திரைகளை பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் – சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையினர் போதைக்காக மருந்து மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வகுப்பறையொன்றில் குறைந்தபட்சம் இரண்டு மாணவர்கள் இவ்வாறு போதைக்காக மருந்து,மாத்திரைகள் மற்றும் மதுபானத்தை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுவிஸில் போதைக்காக மாத்திரைகளை பயன்படுத்தும் இளம் தலைமுறையினர்
சூரிச் பல்கலைக்கழகத்தினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய மாணவர்களில் 46 வீதமானவர்கள் கஞ்சா மதுபானம் போன்ற இரண்டு வகை பொருட்களை கலந்து உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் சக்தி வாய்ந்த வலி நிவாரணிகளையும் போதைக்காக மாணவர்கள் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இளையவர் ஒருவர் Xanax என்னும் மருந்து வில்லைகள் ஒன்று அல்லது இரண்டுடன் கலந்து மது அருந்தினால் அது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.