கோவிட் தடுப்பூசி தொடர்பாக சுவிஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு.! சுவிட்சர்லாந்தில் கோவிட் தடுப்பூசி தொடர்ந்தும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசி வைத்தியசாலை அனுமதிகள் மற்றும் பாரதூரமான நோய் நிலைமைகளிலிருந்து பாதுகாப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காப்புறுதியில் கோவிட் தடுப்பூசி உள்ளடக்கப்படாத அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் இது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கோவிட் தடுப்பூசி தொடர்பாக சுவிஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு
இலவசமாக தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட உள்ளது. சுவிட்சர்லாந்து சனத்தொகையினர் மற்றும் எல்லை கடக்கும் பயணிகள் உள்ளிட்டவர்களுக்கு இவ்வாறு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
மேலும் எஞ்சும் தடுப்பூசிகளை வேறும் நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.