சுவிஸ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! | பலர் அதிரடியாக கைது.!! சுவிற்சர்லாந்தில் தொடர்ந்து கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்து வந்த வேளையில் சுவிஸ் பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு பலரை கைது செய்ததாக அறிவுத்துள்ளனர்.
கடந்த இரண்டு இரவுகளில் கொள்ளை நிகழ்வுகளில் எண்ணிக்கை 12 முறை இடம் பெற்று உள்ளது, இதன் காரணமாக சுவிஸ் பொலிஸார் சனிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் 12 கொள்ளை நிகழ்வுகள் ஆர்க (AARGAU) பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த காரணமாக அந்த பிராந்திய பொலிஸ், மத்திய சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு, போக்குவரத்து, மத்திய காவல்துறை, சமூக காவல்துறை ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன.
சுவிஸ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! | பலர் அதிரடியாக கைது.!!
இந்த நடவடிக்கை நடுஇரவுவரை நீடித்தது மேலும் இந்த நடவடிக்கையின் பொழுது 5 பேர் கைது செய்யப்பட்டனர். Würenlos AG பகுதியில் மூன்று 28-34 வயதுக்கும் இடைப்பட்ட ருமேனிய நாட்டவர்கள் எல்லையில் தப்பியோட முயன்ற பொழுது கைது செய்யப்பட்டார்கள்-இவர்கள் சுவிஸ்ஸில் வாழாதவர்கள்.
இவர்களின் கார்களில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டது. Rothrist AG பகுதியில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் 38 வயதுடைய அல்பேனியன் மற்றும் சுவிஸ்ஸில் நிரந்தர வதிவிருமை கொண்ட ருமேனிய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.