சுவிட்சர்லாந்தில் “ஒரு தேசம் இருந்தது” நூல் வெளியீட்டு விழா
சுவிட்சர்லாந்தில் ஈழத்து கவிஞர் வெற்றி துஷ்யந்தனின் புதிய கவிதை நூலான “ஒரு தேசம் இருந்தது” என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, சுவிட்சர்லாந்தின் கிளாட்ப்ருக் நகரில் அமைந்துள்ள அமிர்தம் நில்நிகழ்வு மண்டபத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஈழப் போரின் பின்னணியில், இழந்த தேசம், இடம்பெயர்வு, வேதனை மற்றும் நினைவுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகிறது. கவிஞர் வெற்றி துஷ்யந்தனின் இந்த படைப்பு, ஈழத் தமிழர்களின் வாழ்வனுபவங்களையும் அவர்களின் மன உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நிலையில், “ஒரு தேசம் இருந்தது” நூல் வெளியீட்டு விழா அந்த வரிசையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதப்படுகிறது.

நிகழ்வு நடைபெறும் இடம் Eichstrasse 49, 8152 Glattbrugg