சுவிஸ் வந்த வெளிநாட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேற்றம்
சுவிட்சர்லாந்தில் 2015ஆம் ஆண்டு வந்த வெளிநாட்டு குடியிருப்பாளர்களில் பெரும்பான்மையினர் இன்று நாட்டில் இல்லை என்று புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த ஆண்டு சுமார் 1.5 லட்சம் வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியமர்ந்திருந்தனர். அவர்களில் சுமார் 60 சதவீத மக்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது கணக்குகள் காட்டுகிறது.
தேசியத்தின்படி பார்த்தால், வட அமெரிக்காவிலிருந்து வந்தவர்களே அதிக அளவில் மீண்டும் தங்கள் நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 2015ஆம் ஆண்டு சுவிஸ் வந்த வட அமெரிக்க குடியேறிகளின் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 2024ஆம் ஆண்டின் இறுதி முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வேலை வாய்ப்புகள், தற்காலிக பணிநியமனங்கள், கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற காரணங்கள் இந்த மாற்றத்தை உருவாக்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கு மாறாக, பிற மூன்றாம் நாடுகளிலிருந்து (third countries) வந்த குடியேறிகளின் மீள் குடியேற்ற விகிதம் 50 சதவீதத்திற்கு கொஞ்சம் மேலே மட்டுமே உள்ளது. அதாவது, அவர்கள் சுவிஸில் நீண்ட காலம் தங்கும் “போக்கு அதிகம்.
ஆனால் ஒரு முக்கியமான தரவு என்னவெனில், சுவிஸ் குடியிருப்பாளர்களில் — அதாவது சுவிஸ் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் இருவரும் — வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களில் சுமார் 40 சதவீதம் மக்கள் பின்னர் மீண்டும் சுவிட்சர்லாந்திற்குத் திரும்பிவிடுகின்றனர். வேலை நிலையாக்கம், குடும்ப காரணங்கள், உயர்தர வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு போன்றவை அவர்கள் மீண்டும் வருவதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
சுவிஸ் குடியேற்றத் தரவுகள் தொடர்ந்து அரசியல் மற்றும் சமூக விவாதங்களின் மையமாக இருந்து வரும் நிலையில், இந்த புதிய கணக்குகள் நாட்டின் மக்கள் தொகை இயக்கம் எவ்வாறு மாறி வருகிறதென்பதை தெளிவுபடுத்துகின்றன.
© KeystoneSDA