சுவிஸ் முழுவதும் உறைபனி: லா பிரெவினில் –26.3°C என அரிதான குளிர்
சுவிட்சர்லாந்து கடந்த இரவு உறைபனியில் மூழ்கியது. நவம்பர் மாதத்தில் வெப்பநிலை சாதனைகள் தொடர்ந்திருந்த நிலையில், வெறும் பத்து நாட்களுக்கு முன் டெல்ஸ்பெர்க் பகுதியில் 23.5°C என வெப்ப சாதனை பதிவானது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதே இடத்தில் வெப்பநிலை திடீரென –9.1°C ஆக சரிந்தது.
கடுமையான குளிரின் மையமாகக் கருதப்படும் லா பிரெவின் (La Brévine, NE) இம்முறை தனது பெயருக்கு ஏற்றால் போல் கடும் குளிரை சந்தித்தது. இரவு 2 மணிக்குப் பின் அங்கு –26.3°C என மெட்டியோஸ்விஸ் பதிவு செய்தது. கடல் மட்டத்திலிருந்து 1042 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த பள்ளத்தாக்கு, சுவிட்சர்லாந்தின் ‘பனிப் பள்ளத்தாக்கு’ என அழைக்கப்படும் இடங்களில் ஒன்றாகும்.
கிரௌவுன்டன் மாநிலத்திலும் பனி கடுமையாக இருந்தது. Buffalora (பஃபலோரா) –23.7°C மற்றும் சாமெடான் (Samedan) –20.3°C என பனியால் குளிரடைந்தது.

கீழ்நாட்டு பகுதிகளிலும் வெப்பநிலை திடீர் சரிவு
மேலும் குளிர் தாக்கம் மமலைப்பகுதிகளில் மட்டும் அல்ல மாறாக பிரிபோர்க் கேன்டனின் மார்சென்ஸ் (Marsens, 700m) பகுதியில் –14.5°C பதிவானது.
எமெண்டாலின் லாங்க்னவ் (Langnau, BE) –13.1°C, தூன் (Thun, BE) –11.2°C, மேலும் சூரிச் விமான நிலையம் உள்ள க்லோத்தன் (Kloten, ZH) –9.1°C என குளிர் பரவலாகப் பதிவானது.
டிசினோவும் குளிரிலிருந்து விடுபடவில்லை
வெப்பத்தை விரும்பும் பலர் பெரும்பாலும் செல்லும் டிசினோவிலும் இப்போது அதிக வெப்பம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அங்கு சுமார் 6°C மட்டுமே இருக்கும் என மெட்டியோஸ்விஸ் கணிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் மொழிப் பகுதிகளின் சமவெளிகளில் மதியம் 0 முதல் 4°C வரை மட்டுமே வெப்பநிலை எட்டும் எனவும் முன்னறிவிப்பு கூறுகிறது.
சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் ஒரே இரவில் ஏற்பட்ட இந்த வேகமான குளிர்வை வானிலை நிபுணர்கள் அரிதானதாகக் கூறுகின்றனர். பயணிகளும், ஓட்டுநர்களும் பனி உறைந்த சாலைகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© Nau