உலகின் சிறந்த சீஸ் பட்டத்தை பெற்ற ஸ்விஸ் க்ருயேர் – பெர்னில் நடந்த உலக சீஸ் அவார்ட்ஸ் 2025
உலக சீஸ் அவார்ட்ஸ் 2025 போட்டி இம்முறை ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. 45 நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை ஒன்றுசேர்த்த இந்த சர்வதேச விழாவில், ஸ்விட்சர்லாந்தின் க்ருயேர் AOP சீஸ் உலகின் சிறந்த சீஸ் என்ற உயரிய பட்டத்தை வென்றது.
குறித்த சீஸ் பெர்ன் கண்டோனில் உள்ள கூடத்தில் தயார் செய்யப்பட்டதாகவும், அதை தயாரித்தவர் Pius Hitz எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் ஐந்து கண்டங்களில் இருந்து வந்த 250 நிபுணர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மேசைகளில் அடுக்கப்பட்ட பல வகை சீஸ்களை பரிசீலித்தனர். இறுதிசுற்றுக்கு 14 சீஸ்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன.
Keystone / Anthony
இந்த வெற்றி, ஒன்பது நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட ஸ்விஸ் பாரம்பரியத் திறமையின் சிறப்பை வெளிக்கொணர்கிறது என்று Gruyère Interprofessional Association தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் AOP (Protected Designation of Origin) குறியீட்டுடன் வரும் பொருட்கள் தரநிலையும் கண்காணிப்புத் திறனும் பாதுகாக்கப்படுகின்றன என்பது இந்த வெற்றியால் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
1988 முதல் நடைபெற்று வரும் இந்த உலக சீஸ் போட்டி, இவ்வாண்டு முதல் முறையாக ஸ்விட்சர்லாந்தில் நடத்தப்பட்டது. இது ஸ்விஸ் பால்வள கலையை உலகத்திற்கு வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வாய்ப்பாக இருந்தது.அடுத்த ஆண்டு நடைபெறும் World Cheese Awards விழா ஸ்பெயினின் கொர்டோபா நகரில் நடைபெற உள்ளது.