சுவிட்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற இளஞ்செழியன் அவர்களுக்கான சேவைப்பராட்டு விழா.!
ஈழத்து வரலாற்றில் நீதித்துறையில் தனக்னெ ஓர் தடம் படைத்து சரித்திர நாயகனாக வலம் வரும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் சேவைநலன் பராட்டு விழா நேற்று 9ம் திகதி இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து வாழ் வேலணை மக்களால் இந்த வரவேற்பு சேவைப்பராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த குறித்த நிகழ்வு திரு-இளஞ்செழியன் அவர்களுக்கு ஆராத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்படட பின்னர் மங்கள வாத்திய இசையுடன் உள்ளே அழைத்துவரப்பட்டார். ஆரம்ப நிகழ்வாக உயிர்நீத்த உறவுகளுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதன் பின்னராக விழா ஏற்பாட்டாளரான அப்புத்துரை ஆனந்தன் அவர்களின் வரவேற்பு உரையோடு விழா ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து வரவேற்று நடனம் தருணிகா ராஜ் கண்ணன் அவர்களாலும்- ஆசியுரை தர்மலிங்கம் சசிகுமார் அவர்களாலும் – வாழ்த்துரை கந்தையா ரவி அவர்களும்- கந்தசாமி விநாயகமூர்த்தி அவர்களால் இளஞ்செழியன் அவர்களுக்கு சிறப்பு பராட்டு கவிமாலை வாசிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து குறித்த பாராட்டு விழாவினை திறம்பட தொகுத்து வழங்கிய சுரேஷ் செல்வரத்தினம் அவர்களால் இளம்செழியன் அவர்களின் ஆளுமை பற்றிய உரை ஆற்றப்பட்டு இளஞ்செழியன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து சிறப்பு உரை கல்லாறு சதீஸ் அவர்களினாலும் ஆற்றப்பட்டு பின்னர் பேர்ன் முருகன் ஆலய நிர்வாகத்தினராலும் தொடர்ந்து புங்குடுதீவு மக்கள் மற்றும் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றியத்தினராலும் இளஞ்செழியன் அவர்களுக்கு மான்பேற்றல் இடம்பெற்றது.
அதன்பின்னராக திரு: மதி அவர்களால் சிறப்பு கவிதை கேடயம் வாசிக்கப்பட்டது. பேர்ன் வள்ளுவன் பாடசாலை ஆசிரியர் முருகவேள் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்டது. அடுத்த நிகழ்வாக வாழ்த்துரை சுவிட்சர்லாந்தின் இளம் தலைமுறை சார்ந்து அர்ச்சனா அவர்களாலும் அதனை தொடர்ந்து திருமதி :அம்பிகா ராசலிங்கம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
சிறப்பு உரை ஐ.பி.சி ஊடகவியளாளர் தமிழரசு – செந்தில்நாதன் – பொலிகை ஜெயா அவர்களாலும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னராக விழா நாயகன் நீதியின் காவலனான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் ஏற்புரை மிகச்சிறப்பாக இடம்பெற்றது. தனது நீதித்துறையின் நீண்ட பயணம் தொடர்பிலும் கடந்து வந்த பாதையின் இன்னல்கள் பற்றியும் தெளிவாக உரையாற்றியிருந்தார்.
இதனை அடுத்து வாழ்த்துரை வேலனை சுவிட்சர்லாந்து ஒன்றியம் சார்பில் திரு- சந்திரன் அவர்களால் வாழ்த்துரை வழங்கப்பட்டது. நிகழ்வின் நிறைவாக நன்றியுரை வேலணை மக்கள் ஒன்றியம் சார்பில் இடம்பெற்று இனிதே நிறைவுபெற்றது.