யாழ்ப்பாணம் வேலணையின் மைந்தன் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் பாராட்டு விழா ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (09/11/25) நடத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து வாழ் வேலணை மக்களினால் இந்த விசேட சேவை பாராட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் தமிழர் ஓருவரின் சாதனை பயணத்தை கௌரவிக்கும் உன்னத நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஓர் நீதிபதியாக இளஞ்செழியன் அனைத்து மக்களினாலும் போற்றப்படுகின்ற ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Place :-
Resataurant UPD,
Waldau,Fest Saal-1.
Bollingen Strasse.111
3072.Ostermundigen
Time : 14:30