வெளிநாட்டவர்களை வாக்குப்பதிவில் ஈடுபட அழைப்பு : பிரிபூர்க் மாகாணம் தீவிர பிரசாரம்
சுவிஸ்சின் பிரிபூர்க் கண்டோனில் உள்ள நகராட்சித் தேர்தல்கள் 2026 மார்சில் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, அங்கு வசிக்கும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் வாக்களிக்கும் உரிமை கொண்டுள்ளதை நினைவூட்டும் பிரசாரத்தை உள்ளூர் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
சுவிஸ்சில் “C” வகை அனுமதி பத்திரம் பெற்றவர்கள், மேலும் குறைந்தது ஐந்து ஆண்டுகளாக பிரிபூர்க் கண்டோனில் வசித்து வரும்வர்கள், நகராட்சி மட்டத்தில் வாக்களிப்பதற்கும் வேட்பாளராக நிற்பதற்கும் உரிமை பெற்றுள்ளனர். எனினும், இந்த உரிமையை பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவென தெரிவிக்கப்படுகிறது.

மாநில குடிவரவு ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறி தடுப்பு ஆணையத் தலைவர் பட்ரிஸ் போர்கார்ட் கூறியதாவது, “இந்த உரிமை சுமார் 40,000 பேரைச் சேர்ந்ததாக இருந்தாலும், அவர்கள் பலரும் அதை பயன்படுத்துவதில்லை” என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதனை மாற்றும் நோக்கில், ஆணையம் பல மொழிகளில் தகவல் பிரசாரத்தை தொடங்கி, வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தேர்தலில் பங்கேற்கும் உரிமையை அறியச் செய்ய முயற்சி செய்து வருகிறது.
சுவிஸ்சின் பல கண்டோன்களில், வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கு நகராட்சி மட்டத்தில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருப்பது, சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான அடையாளமாக கருதப்படுகிறது.
© KeystoneSDA