துர்காவ் கன்டோனிலுள்ள புகலிட கோரிக்கையாளர் மையம் மீண்டும் திறப்பு
துர்காவ் கன்டோனிலுள்ள ஸ்டெக்போர்ன் (Steckborn) கூட்டாட்சி புகலிட கோரிக்கையாளர் (Federal Asylum Centre) வரும் செப்டம்பர் நடுப்பகுதியில் மீண்டும் செயல்பட உள்ளது. 270 இடங்கள் கொண்ட இந்த மையம், ஆண்டின் இறுதி வரை அதிகரிக்கும் அகதி விண்ணப்பங்களை சமாளிக்க உதவும் என்று கூட்டாட்சி குடியேற்றச் செயல்நிர்வாகம் (SEM) அறிவித்துள்ளது.
இந்த மையம் 2024 ஜனவரியில், விண்ணப்பங்கள் குறைந்ததால் மூடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, சுவிஸ் முழுவதும் அரசாங்கம் வழங்கும் மொத்த புகலிட கோரிக்கையாளர் இடங்கள் 7,500 ஆகும்.

மையம் குறித்து முன்னதாக ஸ்டெக்போர்ன் நகராட்சியில் கடுமையான விவாதம் நடந்தது. சில குடிமக்கள் பாதுகாப்பு சிக்கல்கள் அதிகரிக்கும் என்ற காரணத்தால் மையத்தை மூட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். ஆனால் போலீஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலான விவாதத்திற்குப் பின் நடந்த வாக்கெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் மையம் தொடர வேண்டும் என ஆதரவு தெரிவித்ததால், மையம் மீண்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
@Keystone