லௌசானில் ஒவ்வொரு கட்டிடத்தின் முன்பும் இயற்கை காய்கறி தோட்டங்கள் அமைக்க புதிய திட்டம்
வாட் கன்டோன் தலைநகரமான லௌசானின் நகராட்சி, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக புதிய மற்றும் லட்சிய இலக்குகளை அறிவித்துள்ளது. நகரத்தில் ‘நகர தோட்டங்கள்’ எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள், லௌசா நகரில் உள்ள ஒவ்வொரு கட்டிடத்தின் அடிவாரத்திலும் ஒரு இயற்கை காய்கறி தோட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இது நகரத்தை பசுமையாகவும், நிலைத்தன்மையுடனும் மாற்றுவதற்கு ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.

இந்த இலக்கை அடைய, நகராட்சி ‘பாக்கெட் தோட்டங்கள்’—நகரப் பகுதிகளில் சிறிய அளவில் தாவரங்கள் மற்றும் பசுமையை உள்ளடக்கிய தோட்டங்கள்—அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், கல்வி நோக்கத்திற்கான காய்கறி தோட்டங்கள், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட உள்ளன.
இதுதவிர, கூடுதல் நகர காய்கறி தோட்டங்கள் நகரவாசிகளுக்கு புதிய, இயற்கை காய்கறிகளை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்படும். இந்த திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியாக அமையும்.
@Keystone