சுவிட்சர்லாந்தில் உக்ரேனியர்களின் வேலை அனுமதியை நிறுத்த கட்சி வேண்டுகோள்
சுவிட்சர்லாந்தில் தற்காலிகமாக தங்கியுள்ள உக்ரைனியர்களின் பாதுகாப்பு அனுமதி ரத்து செய்ய வேண்டும் என சுயேச்சை நிலைப்பாட்டைக் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி (SVP) வலியுறுத்தியுள்ளது.
உக்ரைனில் 2022ம் ஆண்டு போர் வெடித்ததும், சுவிஸ் அரசாங்கம் அவசரகாலமாக ‘S அனுமதிப்பத்திரம்’ என்ற புதிய தற்காலிக குடியிருப்புப் பரிமாணத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் உக்ரைனியர் சுவிட்சர்லாந்தில் தங்கவும், வேலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது சுமார் 70,000 உக்ரைனியர் இந்த ‘S அனுமதிப்’ பத்திரத்தின் மூலம் நாட்டில் தங்கியுள்ளனர். பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், சுவிஸ் மக்கள் கட்சி (Swiss People’s Party) இந்த அனுமதியை ரத்து செய்து, இனிமேல் சுவிட்சர்லாந்தில் தங்க விரும்பும் உக்ரைனியர்கள் வழக்கமான அகதித் திட்டத்தின் கீழ் மட்டும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் உண்மையில் பாதுகாப்பு தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும் எனக் கட்சி தெரிவிக்கிறது.
ஆனால் இந்த முன்மொழிவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது. சமூக ஜனநாயகக் கட்சி (SP) இதை ‘பொறுப்பற்ற நடவடிக்கை’ என விமர்சிக்கிறது. சுதந்திரக்கட்சியினர் (FDP) இதை ‘வெகுவாக முன்னதாக எடுத்த முடிவு’ எனக் கூறுகின்றனர். அரசாங்கம் கடந்த ஆண்டே, இந்த ‘S அனுமதிப்’ பதவி 2026 வரை நீட்டிக்கப்படும் என அறிவித்தது. தற்போது இதை 2027 வரையும் நீட்டிக்கலாமா என பரிசீலனை செய்து வருகிகன்றமை குறிப்பிடத்தக்கது.
@WRS