சுவிட்சர்லாந்தில் மின்னணு கழிவு மறுசுழற்சி 2% உயர்வு – புதிய சட்ட மாற்றங்கள் காரணம்
சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டில் மின் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுப் பொருட்கள் மறுசுழற்சியில் 2 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு சுமார் 135,200 டொன் மின் சாதனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டைவிட 2% அதிகமாகும்.
இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக, புதிய மறுசுழற்சி ஒப்பந்தங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட திருத்தம் கருதப்படுகின்றன. இந்த தகவலை Sens eRecycling அமைப்பும், சுவிட்சர்லாந்தின் டிஜிட்டல் பொருளாதார சங்கமான Swicoவும் வெளியிட்டுள்ளன.
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில், சூரிய ஒளி மின்னாற்றல் பலகைகள் (Photovoltaikmodule) முன்னிலை வகிக்கின்றன. இவைகளின் மறுசுழற்சி அளவு கடந்த ஆண்டைவிட இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. அதேபோல், பெரிய மற்றும் சிறிய மின் சாதனங்கள் மீண்டும் செயலாக்கப்பட்ட அளவிலும் 8% வரை வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

ஆனால், குளிர்சாதன, ஃபிரிட்ஜ் மற்றும் குளிமாற்றி சாதனங்கள் (கூலிங்-ஏர் கண்டிஷனிங் சாதனங்கள்) மறுசுழற்சியில் 8% குறைவான அளவுகளே பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளுக்குள் சராசரியாக 20,000 டொன் அளவில் இவை மாறாத விகிதத்தில் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி சுவிட்சர்லாந்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சட்டப் பொறுப்புணர்வின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.