சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் காலநிலை சீர்கேடு
சுவிட்சர்லாந்தில் மேற்கில் இருந்து கிழக்கை நோக்கி கடுமையான இடியுடன் கூடிய புயல் தாக்கியதைத் தொடர்ந்து, ஒருவர் படுகாயமடைந்தார் மற்றும் பல போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பெர்ன் மாகாணத்தில் ஒரு நபர் விழுந்த மரக் கிளை மோதி படுகாயமடைந்த நிலையில், சுவிஸ் விமான மீட்பு சேவையான ரீகா (Rega) அவரை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
பியெல் மற்றும் சீலாண்டு பகுதியில் வீழ்ந்த மரங்கள் மற்றும் கிளைகள் காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Unwetterradar – Schweiz
நெசாடெல் பகுதியில் மணிக்கு 140 கிமீ மற்றும் கிரென்சனில் 127 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதாக, மெட்டியோநியூஸ் (Meteonews) வானிலை சேவை தனது X சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இது போன்ற கடும் புயலால், நெசாடெலில் நடைபெற்று வந்த ஓபன்-ஏர் இசைவிழா இடைநிறுத்தப்பட்டு, மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். விழா மேடைகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த புயலால் ஏற்பட்ட அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ஆல்ப்ஸ் மலைகளின் வடக்கு பகுதிகளுக்கு கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.