அதிக வெப்பத்திலிருந்து சிறுவர் மற்றும் முதியோரை பாதுகாக்க ஜெனிவா நகரம் புதிய திட்டம்
வெப்ப அலை (heatwave) எதிரொலி நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், ஜெனிவா நகரம் முதியோரையும், சிறார்களையும் பாதுகாக்கும் வகையில் ஒரு விரிவான வெயில்காற்று பாதுகாப்புத் திட்டத்தை (Plan Canicule) செயல்படுத்தத் தயாராகி வருகிறது.
யாருக்கு இந்த திட்டம்?
இந்த திட்டம் 65 வயதுக்கு மேற்பட்ட ஜெனிவா நகரில் வசிக்கும் மக்கள் அனைவரையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், தற்போது வரை அந்த வயதினருக்கான ஒரு கடிதம், நகர ஆட்சி மையத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இதில், உதவிக்கான பதிவு செய்வது எப்படி, என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பதற்கான முழு தகவலும் விளக்கப்பட்டுள்ளது.
முதியோருக்கான சிறப்பு சேவைகள்:
- இலவசமாக நீச்சல் குளங்களை பயன்படுத்த அனுமதி
- இலவச சினிமா டிக்கெட்டுகள், குளிர்பதன வசதி கொண்ட சினிமா அரங்குகளில் ஓய்வெடுக்க
- வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய முதியோர் தனிமையில் தவிக்காமல், சமூக சேவைகள் அல்லது தன்னார்வலர்களால் பார்வையிடப்படுகிறார்கள்
இவை அனைத்தும், வெப்ப அலை காலத்தில் அவர்கள் உடல்நிலை சீராகவும், பாதுகாப்பாகவும் இருக்க உதவுவதாகும்.

சிறார்களும் மறக்கப்படவில்லை:
வெப்ப அலை குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடியதனால், பசுமை நிழல் மற்றும் குளிர்ச்சி வழங்கும் வகையில்:
- சிறுவர் பராமரிப்பு மையங்கள் (crèches) மற்றும் playschools-க்கு
- திரைகள் (curtains) மற்றும்
- வெப்பத் தடுப்பு குடைகள் (parasols) வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சிறுவர்கள் வெப்பம் குறைந்த இடங்களில் பாதுகாப்பாக இருக்க முடியும்.
வெப்ப அலை என்பது நம்மைச் சுற்றியுள்ள பலரின் உயிருக்கு ஆபத்தான ஒன்று. ஜெனிவா நகரம் முதியோர்களையும், சிறார்களையும் பாதுகாக்க முனைந்து வருகிறது. உதவிக்குத் தேவையானவர்கள் தங்களது பெயரை உடனடியாக பதிவுசெய்து, இந்த சேவைகளிலிருந்து நன்மை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.