எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் சுவிசில் 40 சாட்டிலைட்களை பொருத்த திட்டம்
எலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனம் SpaceX, தனது Starlink செயற்கைக்கோள் இணையத்திற்கான கேட்வே அன்டினாக்கள் நிறுவுவதற்காக ஸ்விட்சர்லாந்தின் வாலே (Valais) மாகாணத்தில் உள்ள லீக் (Leuk) நகரில் 40 அன்டினாக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான பொதுக் கலந்தாய்வு ஜூன் 28ஆம் திகதி வரை நடை பெறுகிறது. ஆனால், திட்ட ஆவணங்களில் Starlink என்பது நேரடியாக குறிப்பிடப்படவில்லை.
அன்டினாக்களின் வகையைப் பார்க்கும்போது இது Starlink திட்டத்துடன் தொடர்புடையதென்று நிச்சயமாகக் கூறலாம்,” என லீக் நகர மேயர் ஆலென் பிரேஜி உறுதிப்படுத்தினார்.

Starlink என்பது, SpaceX நிறுவனம் இயக்கும், குறைந்த உயரத்தில் உள்ள பூமி சுற்றுவட்ட செயற்கைக்கோள்களால் இயக்கப்படும் உலகளாவிய இணைய நெட்வொர்க் ஆகும். இது பொதுவாக தொடர்பு வசதியற்ற மலைபாதைகள், வெறிச்சோடிய பிரதேசங்கள் போன்ற இடங்களில் இணைய சேவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
Starlink விண்வெளியில் 6,750க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் உள்ளன.
உலகம் முழுவதும் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.