சுவிட்சர்லாந்தில் 67 குழந்தைகளுக்கு தந்தையானவரால் அதிர்ச்சி.!!
ஒரு விந்தணு கொடையாளர் குறைந்தது எட்டு ஐரோப்பிய நாடுகளில் 67 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பது மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நபரிடம் இருந்த விந்தணு மூலம் பிறந்த குழந்தைகளில் பத்துபேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம் – அந்த கொடையாளருக்கு ஒரு அபூர்வமான, புற்றுநோயை உண்டாக்கக்கூடிய மரபணு மாற்றம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், ஒரு விந்தணு கொடையாளரால் அதிகபட்சம் எட்டு குழந்தைகளுக்கு மட்டும் தந்தையாக இருக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இந்த விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்பது இப்போது வெளியாகியுள்ளது.
ஒரு ஆய்வின் மூலம் 55 விந்தணு கொடையாளர்கள் இந்த எல்லையை மீறி, ஒன்பது முதல் 19 குழந்தைகள் வரை பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நபர் மட்டும் 19 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடையாளர்களின் விந்தணுக்களால் 2001 முதல் 2011 வரை பிறந்த 500 முதல் 700 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இந்த விவகாரம் வெகுவாக பரபரப்பை ஏற்படுத்தியதால், சுவிஸ் மத்திய அரசு தற்போது விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது.
எந்த கொடையாளரால் எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளனர் என்பதை மத்திய அரசு மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறது. ஆனால், “எட்டு குழந்தைகள்” என்ற வரம்பு கடைபிடிக்கப்படுகிறது என்பதை சரியாக கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்பது ஒரு பெரிய குறைபாடாக இருக்கிறது. இதனால்தான், இந்த விதிமுறைகள் எப்போதும் சரியாக செயல்படும் என்று உறுதியாகக் கூற முடியாது என அரசு தெரிவித்துள்ளது.