சுவிஸ் அரசாங்கத்தின் மீது முன்னாள் தூதர்கள் கடும் அதிருப்தி
சுவிட்சர்லாந்து அராசங்கம் மீது முன்னாள் தூதுவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டு பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர்.
இஸ்ரேலிய படையினர் காசாவில் மேற்கொண்டு வரும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சுவிட்சர்லாந்து தொடாந்தும் மௌனம் காத்து வருவதாக 55 முன்னாள் தூதுவர்கள் கண்டனம் வெளியிட்டள்ளனர்.
சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் இக்னாசியோ காசிஸிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க சுவிட்சர்லாந்தை வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேல், காசாவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றவும், அந்தப் பகுதியை மீண்டும் இராணுவமாக ஆக்கிரமிக்கவும் திட்டமிடுகிறது. இது இன அழிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளாகும் என தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து இதனை தெளிவாக கண்டிப்பதாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்காவின் தலைமையில், இஸ்ரேலின் அனுமதியுடன் இயங்கும் புதிய “காசா ஹ்யூமனிடேரியன் ஃபவுண்டேஷன்” சுவிட்சர்லாந்தால் ஏற்கக் கூடாது என தூதர்கள் கூறியுள்ளனர்.
தன் உணவுப் பகிர்வு முறைகள், ஐ.நா.வின் நடுநிலை, வெளிப்படைத்தன்மை மற்றும் சுயாதீனக் கொள்கைகளை மீறுகிறது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இஸ்ரேலுடன் உள்ள அனைத்து இராணுவ, அறிவியல், கல்வி ஒத்துழைப்பும் – சர்வதேச சட்டங்களை மீறுபவையாக இருந்தால் – உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் இருந்து வருவோர் மற்றும் தண்டனை பெற்ற வன்முறைக்காரர்களுக்குப் சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.