சுவிட்சர்லாந்து பொருளாதாரத்தில் சிறிய முன்னேற்றம்.!!
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் சிறிதளவு முன்னன்றறம் பதிவாகியுள்ளது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சியை அளவிடும் KOF பொருளாதார குறிகாட்டி (KOF Economic Barometer) இன்னும் நீண்டகால சராசரியை விட குறைவாகவே உள்ளது.
சூரிச் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் KOF சுவிஸ் பொருளாதார நிறுவனத்தின் வாராந்த அறிக்கையின்படி, மே மாதத்தில் இந்த சுட்டெண் 1.4 புள்ளிகள் உயர்ந்து 98.5 ஆக பதிவாகியுள்ளது.
இதில் இரண்டாம் நிலைத் துறையின் (Secondary Sector) பங்களிப்பு முக்கியமாக இருந்தது.

தொழிற்துறை சார்ந்த உற்பத்திகளில் இரசாயனங்கள் மற்றும் மருந்துகள், கண்ணாடி, கல், உணவு, காகிதம் மற்றும் அச்சுத் துறைகள் மீண்டும் உயர்வை கண்டுள்ளன. ஆனால் துணி உற்பத்தி மற்றும் உலோகத் துறை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
1970 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்டு வரும் KOF பொருளாதாரக் குறிகாட்டி, சுவிஸ் அரச புள்ளிவிவர அலுவலகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலாளரகத்தின் (SECO) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 500-க்கும் மேற்பட்ட அளவுகோல்களை வைத்து கணக்கிடப்படுகிறது.
இன்னும் பல ஆபத்துக்கள் நீடிக்கும் சூழலில், சுவிட்சர்லாந்து பொருளாதாரம் மிகவும் கவனமாக முன்னேற வேண்டிய அவசியத்தில் உள்ளது.