சுவிஸில் தானியங்கி வாகனங்கள் பயன்பாடு : விரைவில் புதிய மாற்றம்
சுவிட்சர்லாந்தில் சாரதியற்ற தானியங்கி வாகனங்கள் (driverless vehicles) போக்குவரத்தில் ஈடுபடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தானியங்கி வாகனங்கள் சோதனை ஓட்டங்களை துவங்கி பத்தாண்டுகள் முடிவடைவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் தற்போது சட்ட மாற்றம் ஒன்றால், இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் வேகமாக நடை பெறக்கூடிய நிலையைக் கொண்டுள்ளது. மார்ச் 1, 2025 முதல் அமலுக்கு வந்த கன்டோன்கள் மையமான புதிய சட்டம் தற்போது கண்காணிப்பாளர் இல்லாமல் சாலைகளில் நேரடி சோதனை நடத்த அனுமதிக்கிறது.
இதனால், சாரதிகள் அற்ற கார்கள், பஸ்கள் மற்றும் விநியோக வாகனங்கள் மூன்று ஆண்டுகளில் சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் நிலையை எட்டலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
2015 முதல் இன்றுவரை சுவிட்சர்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட சாரதியில்லா தானியங்கி வாகன திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. LOXO போன்ற நிறுவனங்கள், வணிக வினியோக வாகனங்களை வடிவமைக்க AI சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றன.

அறிவு திறனுடன் இயங்கும் இவைகள் மனித தலையீடு இன்றி சாலையை உணர்ந்து, இடர்பாடுகளைத் தவிர்த்து, பயணிகளை நம்பிக்கையுடன் அழைத்துச் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
, “சாலை சோதனைகள் மட்டுமல்ல, மக்கள் ஏற்றுக்கொள்வது, சேவைகள் எவ்வாறு செயல்பட வேண்டும், செலவுகள் எவ்வளவு, என பல கேள்விகளுக்கு பதில் தேவை,” என Swiss Transit Lab அமைப்பின் தலைவர் மத்தியாஸ் ரோட்டர் தெரிவித்தார்.
PostAuto நிறுவனம் கிராமப்புறங்களை நகரங்களோடு இணைக்கும் பஸ்கள் மூலம் டிரைவரில்லா சேவைகளை சோதித்து வருகிறது. ஆனால், “5 வாகனங்களை இயக்குவதும், 50 வாகனங்களை இயக்குவதும் வித்தியாசம் அதிகம். மனித வளம், பராமரிப்பு, செலவுகள், அனைத்தும் சவாலாக உள்ளது,” என திட்டத் தலைவர் மார்டின் நியுபவுர் கூறுகிறார்.