சுவிட்சர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு
சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இடையிலான புதிய இருதரப்பு உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்தில், சுவிஸ் பிரதிநிதி பாட்ரிக் ஃப்ரான்சென் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ரிச்சர்ட் ஸோஸ்டாக் ஆகியோர், பேர்னில் நடந்த சந்திப்பில் உடன்படிக்கைகள் மீது தங்கள் ஆரம்ப எழுத்துக்களை பதிந்தனர்.
இந்த விடயத்தை சுவிட்சர்லாந்தின் மத்திய அரசு இன்று உறுதிப்படுத்தியது.

“இணிசெய்தல் (Initialling)” என்பது ஒவ்வொரு பக்கத்திலும் முக்கிய பேச்சாளர்கள் தங்கள் எழுத்துக்களைப் பதித்து, பேச்சுவார்த்தையின் முடிவுகளை சரியாக பிரதிபலிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.
இது, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான நீண்டகால சிக்கலான உறவுகளுக்கு ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது. கடந்த ஜனவரி மாதம், இருதரப்பும் இந்நிலையில் புதிய ஒப்பந்தங்களை உருவாக்கும் பணியை தீவிரமாக முன்னெடுத்திருந்தது.
முழு உரை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 2026 முதல் காலாண்டில், ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ கையெழுத்து நிகழ்வும் நடைபெறும் என அரசுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.