ஜெனீவாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை விதிப்பில் சிக்கல்.!!
ஜெனீவாவில் ஜனவரி 1 ஆம் தேதி புதிய கழிவுச் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது, இதில் உணவகங்கள், Take Away பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் உணவுப் பிரிவுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் Bag தடை செய்யப்பட்டது.
இருப்பினும், Migros Geneva, Coop, Denner, Manor மற்றும் Migrolino போன்ற பெரிய சில்லறை விற்பனையாளர்கள் சட்டத்தை எதிர்த்து பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சட்டம் அவர்களின் “பொருளாதார சுதந்திரத்திற்கு” தீங்கு விளைவிக்கும் என்று அவர்கள் வாதிட்டனர்.
சில்லறை விற்பனையாளர்கள் ஏற்கனவே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே முறையான தடை தேவையற்றது என்றும் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் பெடரல் கோர்ட் இன்னும் முடிவெடுக்கவில்லை, எனவே தடை தற்போது தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.