பிரெஞ்சு பிரீமியம் தொலைக்காட்சி சேனல் Canalplus பல நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் திருட்டு மிகவும் பொதுவானது என்று வெளிப்படுத்தியுள்ளது. சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில், சுவிட்சர்லாந்தில் 76% டிவி பார்வையாளர்கள் (illegal content) திருட்டு உள்ளடக்கத்தைப் பார்க்கிறார்கள். இது பிரான்சுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும். பிரான்சில் உள்ள பார்வையாளர்களில் 24% மட்டுமே இதைச் செய்கிறார்கள்.
**IPTV பெட்டிகளின் பங்கு** (IPTV BOX)
முக்கிய பிரச்சினை ஹேக் செய்யப்பட்ட IPTV பெட்டிகளைப் பயன்படுத்துவதே. இந்தச் சாதனங்கள் சட்டப்பூர்வமாக விற்கப்படுகின்றன, ஆனால் பயனர்கள் பெரும்பாலும் சிறப்பு மென்பொருளை நிறுவி டிவி சேனல்களை இலவசமாகப் பெறலாம். பொதுவாக சந்தா தேவைப்படும் விளையாட்டு மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு இவ்வாறான சட்டவிரோத முறைகளை பயன்படுத்தி இலவசமாக பார்க்கிறார்கள்.
Canalplus நிறுவனம் Tribune de Genève க்கு அளித்த பேட்டியில்,பலவீனமான பதிப்புரிமைச் சட்டங்களைக் கொண்ட சுவிட்சர்லாந்தை கடுமையாக விமர்சித்தார். கடுமையான சட்டங்கள் நாட்டில் அதிக அளவிலான கொள்ளையைக் குறைக்க உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
**பயனர்களுக்கான அபாயங்கள்**
சட்டவிரோத IPTV பெட்டிகளைப் பயன்படுத்துபவர்கள் ஹேக் செய்யப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் Canal+ எச்சரிக்கிறது. இந்தச் சாதனங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவலை அம்பலப்படுத்தும் அல்லது அவர்களின் ஆன்லைன் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும் எனவும் எச்சரிக்கிறார்கள்.
கேளிக்கைத் துறையையும் பொதுமக்களையும் சட்டவிரோத ஸ்ட்ரீமிங்குடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து பாதுகாக்கவும் வலுவான விதிமுறைகளும் விழிப்புணர்வும் தேவை எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.