சிறுவர் ஆபாசப் படங்களை அனுப்பியவர் மீது சூரிச் நீதிமன்றில் வழக்கு..!! சுவிட்சர்லாந்தில் விபசாரம் சட்டரீதியாக இயங்கினாலும் ஒருவரின் அனுமதியின்றி பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறது. இது நேரடியாக மட்டும் இல்லாமல் ஆன்லைனில் நீங்கள் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறப்பான பாலியல் நடவடிக்கைகளுக்கும் பொருந்தும்.
அவ்வாறு தடைசெய்யப்பட்ட பாலியல் செயற்பாடுகளால் சிக்கிய ஒருவரது வழக்கு தொடர்பான செய்திகளையும் இவ்வாறான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் எப்படியான தண்டனைகள் சுவிட்சர்லாந்தில் வழங்கப்படுகிறது என்பது தொடர்பான தகவல்களையும் அலசுகிறது இன்றைய குற்றமும் பின்னணியும் பகுதி.
B குடியிருப்பு அனுமதி பெற்ற அங்கோலாவைச் சேர்ந்த 56 வயது நபர் WhatsApp மற்றும் Facebook Messenger மூலம் ஆபாச வீடியோவை அனுப்பியதற்காக சூரிச் மாவட்ட நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அமெரிக்காவிடமிருந்து ஒரு உதவிக்குறிப்பைப் பெற்ற பிறகு சுவிட்சர்லாந்து அதிகாரிகளால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
**என்ன நடந்தது?**
அந்த நபர் 2023ல் பல மாதங்களாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் வழியாக **சிக்கலான உள்ளடக்கம் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றிருந்தார். அவர் இந்த உள்ளடக்கத்தைச் சேமித்தாரா அல்லது அவர் கூறியது போல் உடனடியாக நீக்கிவிட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர் குறைந்தது ஒரு ஆபாச வீடியோவையாவது மற்றவர்களுக்கு அனுப்பினார் என்பதை நீதிமன்றத்தால் உறுதியாக நிரூபிக்க முடிந்தது.
**என்ன உள்ளடக்கம் கிடைத்தது?**
இப்போது சுவிட்சர்லாந்தில் ஆபாசமான காணொளிகளை பார்ப்பது தடையா அல்லது தவறா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் உண்மையில் அது அல்ல விடயம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தனிப்பட்ட விருப்பம் அது. அதனை தடுக்க எந்த சட்டங்களும் கட்டுப்பாடுகளும் இங்கில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றால் சட்டத்திற்கு புறம்பான ஆபாசவீடியோக்களை இவர் பெற்றுக்கொண்டதும் அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொண்டமையும்தான்.
வழக்கின் படி, குற்றம் சாட்டப்பட்ட 56 வயதான நபர், குழந்தை ஆபாச காணொளிகள் மற்றும் பெரியவர் சிறியவர் சம்மந்தப்பட்ட வன்முறை வீடியோக்களுடன் விலங்குகள் சம்மந்தப்பட்ட ஆபாசகாணொளிகளையும் சேமித்து வைத்து அதனை மற்றவர்களுக்கும் அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப் வழியாக 625 உறுப்பினர்களுடன் குறித்த காணொளிகள் தொடர்பில் குழு அரட்டையடிக்கவும், மறுபுறம் பேஸ்புக் மெசஞ்சர் வழியாக குறைந்தது பத்து பேருக்கு அனுப்பியும் அவர் எஞ்சிய காணொளிகளை தனது சொந்த நோக்கங்களுக்காக சேமித்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை நடைபெறுவதற்கு முன் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் முன்பு ஆஜராகவில்லை . மாவட்ட நீதிமன்றத்தில், அவர் தனது இரண்டு செல்போன்களில் ஆபாசகாணொளி இருந்ததை மறுக்கவில்லை. இருப்பினும், அனைத்து வீடியோக்களையும் படங்களையும் பெற்ற பிறகு அவற்றை நீக்கிவிட்டதாக அவர் கூறினார்.
அவர் வீடியோக்களையும் படங்களையும் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன்,” என்று அவர் தனது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறினார். அவர் உடனடியாக அதை நீக்கிவிட்டு, அனுப்புநருக்கு அத்தகைய தகவலைப் பெற விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் தான் ஒரு வயது மகனின் தந்தை தனக்கு குழந்தை ஆபாசத்தை பிடிக்கவில்லை என்று வலியுறுத்தியதாகவும் நீமிமன்றில் வாதிட்டார்.
பொலிசார் தனது சாதனத்தில் சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரால் சேமிக்கப்பட்ட மற்றும் அனுப்பப்பட்ட அனைத்து தரவுகளையும் மீட்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான் இவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றவாளி தனக்கு வந்தவற்றை தான் நீக்கிவிட்டதாக வாதிட்டார்.
அரசுவழக்கறிஞர் அலுவகம் குறித்த நபருக்கு , அபராதம் விதிக்கவேண்டும் எனவும் சிறார்களுடனான செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதோடு நாடுகடத்தப்படவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
இறுதியாக நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், சூரிச் மாவட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு **10,800 பிராங்குகள்** நிபந்தனையுடன் அபராதம் விதித்தது. அதாவது அடுத்த சில வருடங்களில் இன்னொரு குற்றத்தைச் செய்தால் மட்டுமே அபராதம் செலுத்த வேண்டும். நாட்டிலிருந்து வெளியேற்றம் அல்லது சிறார்களுடன் பணிபுரிய தடை விதிக்கப்படவில்லை, ஏனெனில் இதற்கு போதுமான ஆதாரங்களை நீதிமன்றம் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.
இதுபோன்ற வீடியோக்களை மற்றவர்களுக்கு அனுப்புவது மாத்திரமல்லாமல் தொலைபேசிகளிலோ கணனிகளிலோ சேமித்து வைப்பது பாரிய குற்றமாக சுவிட்சர்லாந்தில் பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த வழக்கு சிறுவர் தொடர்பான பாலியல் செயல்பாடுகளுக்கு இந்த நாட்டின் அரசு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை காட்டுகிறது.
எனவே சமூகவலைத்தளங்களையும் செயலிகளையும் பயன்படுத்துபவர்கள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டிய அவசியத்தையும் இந்த பதிவின் மூலமாக கேட்டுக்கொள்கின்றோம்.