சுவிஸ் பத்திரிகை ஒன்றில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம் சுவிற்சர்லாந்தில் உள்ள Coop என்ற வியாபார நிறுவனம் வாராந்தம் வெளியிடும் பத்திரிகையில் வெளிவந்த ஒரு பதிவு தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் வகையாக அமைந்துள்ளது.
வாராந்தம் இந்தப்பத்திரிகையில் ஒரு பகுதியில் யாராவது ஒரு கேள்வி கேட்பார்கள், அதற்கு பத்திரிகை ஆசிரியர் பதில் அளிப்பார், அதன்படி இந்த வாரம் உலகத்தில் பழமையான மொழி எது? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அவர்கள் அளித்த பதிலில், உலகில் மிகவும் பழமையான, இன்றும் பேசப்படுகின்ற மொழி என்று முதலாவதாக தமிழை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மேலும் தமிழ், சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழமையான மொழிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உலகப் படத்தில் தமிழ் பேசும் இடம் என்று நேரடியாக இலங்கையை தான் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
இந்த பத்திரிகையின் பதிவில் கடைசியாக கேள்விக்கான பதிலாக “தமிழ்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழின் தொன்மை பற்றியும் அதன் வரலாற்றையும் தமிழர்களாகிய நாம் நன்கு உணர்ந்திருந்தாலும், ஐரோப்பாவில் இருந்து ஜேர்மன் மொழியில் வெளி வருகின்ற பத்திரிகையில் அந்த விடயத்தை குறிப்பிடுவது என்பது புலம்பெயர் வாழ் ஒவ்வொரு தமிழர்களையும் பெருமைப்படவைக்கும் ஒரு விடயமாகவே பார்க்கப்படுகிறது.
குறித்த செய்தியினை குறிப்பாக சுவிட்சர்லாந்தில் வாழுகின்ற தமிழர்கள் சமூகவைலத்தளங்களில் பகிர்ந்து தமது மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.