சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் சனத்தொகை தொடர்பில் மக்கள் கவலை ‘ஒரு புதிய ஆய்வு சுவிட்சர்லாந்தில் சனத்தொகை 10 மில்லியன் மக்களாக வளர்ந்து வரும் நிலை குறித்து பலர் கவலைப்படுவதாகக் காட்டுகிறது.
இருப்பினும், பெரும்பாலான சுவிஸ் மக்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த குடியேற்றத்தைத் தடை செய்ய விரும்பவில்லை என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வு, 6,300 பேரை நேர்காணல் செய்தது. அதில் கிராமப்புறங்களில் உள்ள 74% மக்கள் மக்கள்தொகை வளர்ச்சியைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் 61% மக்கள் குடியேற்றத்தை தடை செய்வதற்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக மக்கள்தொகையைப் பற்றிய மிகப்பெரிய கவலை வீட்டுப் பற்றாக்குறை மற்றும் அதிக வாடகை தொகை ஆகும். மக்கள் அதிக போக்குவரத்து மற்றும் சுவிஸ் கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் கவலை கொண்டுள்ளனர்.
உண்மையில் எத்தனை புலம்பெயர்ந்தோர் சுவிட்சர்லாந்திற்கு வருகிறார்கள் அல்லது அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றி பல சுவிஸ் மக்களுக்கு தெளிவான புரிதல் இல்லை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பா அல்லாத நாடுகளில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கையை பலர் மிகையாக மதிப்பிடுவதாகவும் குறித்து ஆய்வு சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்துக்கது.