துர்காவ் கன்டோனில், விகோல்டிங்கனில் உள்ள குளத்தில் இருந்து 35 வயதுடைய கனேடிய ஆடவரின் சடலத்தை வியாழன் காலை பொலிஸ் நீர்மூழ்கிக் குழுவினர் மீட்டுள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இறப்புக்கான காரணம் தெளிவாக இல்லை, இருப்பினும் மூன்றாம் தரப்பினரின் ஈடுபாட்டிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
துர்காவ் கன்டோனல் காவல்துறையின் அறிக்கையின்படி, அந்த நபரின் குடும்பத்தினர் புதன்கிழமை மாலை அவரைக் காணவில்லை என்று அவசர சேவைகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு தேடுதல் நடாத்தப்பட்டு இரவு நேரம் என்பதால் நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் இன்று வியாழக்கிழமை காலை வாகோ குளத்தில் தேடுதல் முயற்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
காலை 9:30 மணியளவில், குளத்தின் அடிப்பகுதியில் மனிதனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, மேலதிக பரிசோதனைக்காக, செயின்ட் கேலனில் உள்ள தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்கு உடல் மாற்றப்பட்டது. செயின்ட் கேலன் கன்டோனல் காவல்துறையைச் சேர்ந்த பொலிஸ் நீர்மூழ்கிக் குழுவினர் இந்த நடவடிக்கையில் உதவியமையும் குறிப்பிடத்தக்கது.