எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற இளைஞன் கைது சனிக்கிழமை மாலை லுசெர்னில் 16 வயது இளைஞன் ஒருவரை போலீஸ் சோதனை செய்ய முற்பட்ட வேளை மின்சார மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று கைது செய்யப்பட்டான்.
இரவு 8:20 மணியளவில் சீப்ரூக்கில் மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றபோது சம்பவம் தொடங்கியது. நிறுத்துவதற்கு பதிலாக, பயணி லுசேர்ன் பழைய நகரத்திற்கு வேகமாக சென்றனர்.
போலீசார் வேகமாக மோட்டார் சைக்கிளை நகர் வழியாக பின்தொடர்ந்தனர். இறுதியில் Franziskanerplatz இல், இளைஞன் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த இளைஞன் மீண்டும் தப்பி ஓடினார். ஓடும் போது பல உணவகங்களின் (Terrasse) தெராச, மற்றும் பயணிகளை இடித்து தள்ளி ஓடியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இறுதியாக Geissmattbrücke பகுதயில் போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி 16 வயது இளைஞன் கைது செய்தனர். பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது மோட்டார் சைக்கிளால் பாதிக்கப்பட்டவர்கள் 041 248 81 17 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு Luzern பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.