சுவிட்சர்லாந்தின் டிசினோவில் வானிலை: 35.7 டிகிரி! சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வெப்ப எச்சரிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. டிசினோ Biasca ல் இந்த ஆண்டு வெப்பநிலை சாதனை 35.7 டிகிரியாக அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்து தற்போது வெப்பமான நாட்களை சந்தித்து வருகிறது . இந்த சனிக்கிழமை தொடக்கம் வெப்பநிலை மீண்டும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு சில பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தின் டிசினோவில் வானிலை: 35.7 டிகிரி!
இது டிசினோவில் குறிப்பாக அதிக வெப்பநிலைய பதிவாகியுள்ளது.. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் அதிகளவு வெப்பநிலை நிலவியதோடு நான்காம் நிலை அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
எனவே முடிந்தவரை தண்ணீர் குடிக்கவும் எனவும் நேரடி சூரிய ஒளியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அரசாங்கத்தினால்; பரிந்துரைக்கப்படுகிறது.