ஆகஸ்ட் 1 அன்று பட்டாசு வெடிப்பதை விரும்பாத சுவிஸ் மக்கள் சுவிட்சர்லாந்தின் தேசிய தினம் ஆகஸ்ட் 1 கொண்டாடப்படவிருக்கின்றது. வழமையாக இந்நாளில் ஒவ்வொரு கன்டோன்களிலும் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படுவது வழமை.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விதிவிலக்காக ஒரு சில காரணங்களின் அடிப்படையில் வானவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இம்முறை கணக்கெடுக்கப்பட்ட சுவிஸ் மக்களில் பாதி பேருக்கு, ஆகஸ்ட் 1 வானவேடிக்கைகள் சுவிஸ் தேசிய தின விழாக்களில் வானவேடிக்கையை விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.

மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அந்த நாளில் பட்டாசு வெடிப்பதை விரும்புவதில்லை என புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. சூழல் மாசுபாடுஇ விலங்குகளுக்கு மன அழுத்தம் அல்லது காயம் ஏற்படும் அபாயம் ஆகியவற்றைக் அவர்கள் காரணமாக குறிப்பிடுகின்றனர்.
நாட்டின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளுக்கும் இடையே இக்கணக்கொடுப்பு வேறுபட்டு காணப்படுகிறது. பிரெஞ்சு மொழி பேசும் மக்களில் 70 வீதம் பேர் பட்டாசுகளுக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளில் 43 வீதம் பேர் மட்டுமே ஆதரவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மையான சுவிஸ் மக்கள் தனிப்பட்ட முறையில் பட்டாசுகளுக்கு எதிரானவர்கள். ஆனால் இளைய சமுதாயத்தினர் பட்டாசுகளை ஆதரிக்கும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது..
ஐந்தில் ஒருவர் ஆகஸ்ட் 1ம் தேதி சொந்தமாக பட்டாசுகளை வாங்கி வெடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.