லுசேர்ன் போலீசாரிடம் சிக்கிய மிதிவண்டிகள் திருடும் கும்பல் லுசேர்ன் போலீசாரிடம் சிக்கிய மிதிவண்டிகள் திருட்டு கும்பல்ஜேர்மனியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரையும், திருட்டு சைக்கிள்களை வியாபாரம் செய்ததாகக் கூறப்படும் ஐந்து பேரையும் லூசர்ன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட மிதிவண்டிகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வழியில் எல்லையில் நிறுத்தப்பட்டபோது குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபர் 2023 மே மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்குள் இடையில் திருடப்பட்ட பொருட்களை வாங்கி மீண்டும் விற்பனை செய்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையின் இறுதியில் தெரியவந்தது.

இதில் சுமார் 100 உயர்தர சைக்கிள்கள், இ-பைக்குகள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் அடங்கும். கூடுதலாக, பிற மின் உபகரணங்கள் மற்றும் கருவிகளும் திருடப்பட்டுள்ளதாக லுசேர்ன் போலீசார் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
விற்பனையாளர்கள் திருடப்பட்ட பொருட்களுக்கு பணம் மற்றும் போதைப்பொருளைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றத்தின் மொத்தத் தொகை குறைந்தது 255,000 பிராங்குகள் என்று அரசு வழக்கறிஞர் தெரவித்துள்ளார்
இவ்வாறு பொருட்களை திருடி மீண்டும் விற்பனை செய்த ஆறு பேருக்கு எதிராக குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது பெரும்பகுதி பொருட்கள் மறு விற்பனை செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதே போன்றதொரு சம்பவம் செப்டம்பர் 2023 இல், ஜெர்மனியுடனான பாசல் எல்லையில் திருடப்பட்ட சைக்கிள்கள் மற்றும் இ-ஸ்கூட்டர்களைக் கொண்ட இரண்டு போலந்து ஓட்டுநர்கள் ஓட்டிச் சென்ற வேன் மறிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே இரண்டு டிரைவர்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.