துர்காவ் கன்டோனில் வெகுவாக குறைந்துள்ள விவாகரத்துக்கள் கன்டோன் துர்காவ்வில் விவாகரத்து எண்ணிக்கைகள் என்றுமில்லாதளவு குறைவடைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
மொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், கடந்த 34 ஆண்டுகளில் இருந்ததை விடஇ கடந்த ஆண்டு துர்காவில் விவாகரத்து செய்யப்பட்ட திருமணங்கள் குறைவடைந்துள்ளது. அதே நேரத்தில், மண்டலத்தின் படி, புதிதாக இடம்பெற்ற திருமணங்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்த நிலையை அடைந்துள்ளன.

கன்டோன் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி,இ 2023 இல் துர்காவில் 1,289 தம்பதிகள் திருமணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 85 ஜோடிகள் குறைவாகும்.
அதில் 1,234 திருமணங்கள் ஒரு ஆணும் பெண்ணும் மற்றும் 28 ஒரே பாலின ஜோடிகளுக்கும் இடையே நடந்த திருமணமாகும். மேலும் 27 தம்பதிகள் தங்கள் பதிவு செய்யப்பட்ட கூட்டாண்மை திருமணமாக மாற்றப்பட்டது.
திருமணங்கள் தவிர, 485 விவாகரத்துகள் நடந்ததாகவும் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. துர்கா கன்டோனில் ஒரே பாலினத்தவர்களிடையே விவாகரத்துகள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது மாத்திரமின்றி திருமணம் செய்து கொள்பவர்களின் வயது விகிதமும் அதிகரித்துக்கொண்டு செல்லவதாக குறிப்பிட்ட கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. துர்கா கன்டோனில் சராசரியாக பெண்கள் 31 மற்றும் ஆண்கள் 33 வயது முதல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
‘1970 களின் முற்பகுதியில்இ பெண்கள் 24 வயதிலும்இ ஆண்கள் 25 வயதிலும் திருமணம் செய்து கொண்டனர்’ என்று புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கிறது.