ஜெனிவா நகரம் 500 மரங்களை நட்டுள்ளதாக அறிவிப்பு ஜெனிவா நகரமானது வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் மூன்று மரங்களை அமைக்க வேண்டும் என்கின்ற தனது உறுதிமொழியைக் சரியாக கடைப்பிடிக்கிறது.
இந்த வகையில் கடந்த நவம்பர் முதல் இவ்வருடம் ஏப்ரல் வரை கிட்டத்தட்ட 500 161 மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் புதிதாக 500 மரங்களை நடுகை செய்துள்ளது.

வானிலை காரணமாக நடுகை நிலைமைகள் வழக்கத்திற்கு மாறாக கடினமாக இருப்பதாக ஜெனிவா நகரம் கூறுகிறது.
நடப்பட்ட புதிய மரங்கள் ஓக், பைன் மற்றும் மேப்பிள்ஸ் ( oak, pine and maples) என்ற இனம் உட்பட மேலும் 150 வகையான இனங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.
பெரும்பாலான புதிய மரங்கள் பூங்காக்கள் மற்றும் நகரத்திற்கு சொந்தமான பள்ளிக்கூடங்களில் நடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.