கன்டோன் சுக்கில் உள்ள (சொலார் திரஸ்சே ) Chollerstrasse இல் உள்ள புகலிடகோரிக்கையளாளர்கள் விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலை ஆண்கள் குழு ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் இரண்டு குடியிருப்பாளர்கள் உடல் தகராறில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஆறு குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக கைது செய்யப்பட்டுள்ளதாக சுக் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இரண்டு பேர் – 37 வயதான ஈராக்கியர் மற்றும் 37 வயதான செர்பியர் எனவும் ஆறு பேரால் அவர்கள் தாக்கப்பட்டதாக சுக் சட்ட அமலாக்க அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.
துருக்கியைச் சேர்ந்த ஆறு பேரையும் சுக் போலீசார் விசாரணைக்காக கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சுக் மாகாணத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Source (c) Kanton Polizei Zug