A13 மோட்டர்வே மற்றும் Simplon Pass மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.!! கடந்த புயல் மற்றும் வெள்ள அனர்த்தும் காரணமாக மூடப்பட்ட A13 மோட்டார்வேயின் பகுதிகள் மற்றும் Simplon Pass (சிம்ப்ளான் பாஸ்) மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய பாரிய இடியுடன் கூடிய மழை, மண் மற்றும் இடிபாடுகளினால் குறித்த பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதே காரணத்திற்காக Simplon Pass யும் (சிம்ப்ளான் கணவாய்யையும்) அதிகாரிகள் மூட வேண்டியிருந்தது.
படம்: கீஸ்டோன்
இந்நிலையில் நேற்று வியாழன் அன்று ஃபெடரல் சாலைகள் அலுவலகம் இரண்டு பாதைகளும் சரிசெய்யப்பட்டு போக்குவரத்திற்காக மீண்டும் திறக்க தயாராக இருப்பதாக அறிவித்தது.
அதனடிப்படையில் A13 இன்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டுள்ளதோமு சிம்பிளான் கணவாய் மாலை 6 மணி முதல் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.