எச்சரிக்கை : Coop நிறுவனத்தின் பெயரில் மின்னஞ்சல் மோசடி.!! சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய உணவுச்சங்கிலி நிறுவனமான கோப் (Coop) நிறுவனத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு இணைய மோடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோப் நிறுவனத்தின் (Supercard) சுப்பர் காட் என்ற வழங்கலை பயன்படுத்தி பலருக்கு போலியான மின்னஞ்சல் அனுப்பப்பட்டு உங்கள் சுப்பர் கார்ட்டை (Supercard) புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.
அதில் பயனாளர்களின் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி இலக்கம், உட்பட தரவுகள் கேட்கப்பட்டு ஒரு இணைப்பை அழுத்தி புதுப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அந்த இணைப்பு போலியான இணைப்புக்கு சென்றால் அங்கே உங்களது (Credit Card) கிரடிட் கார்ட் தகவல்கள் கேட்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இவ்வாறான போலி மின்னஞ்சல்களை கிளிக் செய்ய வேண்டாம் என சுவிட்சர்லாந்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் அண்மைக்காலமாக இணைய மோசடிகள் பாரிய அளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தின் குற்றத்தடுப்பு போலீசார் மற்றும் இணைய பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் இது தொடர்பாக மக்களை அவதானமாக இருக்கும் படியும் கேட்டுள்ளது. இவ்வாறான போலி இணையத்தளங்கள் மற்றும் போலி மின்னஞ்சல்களை கிளிக் செய்யவோ அல்லது பதில் அளிக்கவோ வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதாரம்: cybercrimepolice.ch