புயலுக்கு முன்னதாக ஜெனிவா வெளிப்புற நிகழ்வுகளை தடை செய்தது!! கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட இடியுடன் கூடிய மழையின் காரணமாக கன்டோன் ஜெனீவா அனைத்து வெளிப்புற நிகழ்வுகளையும் தடை செய்துள்ளது.
இதில் யூரோ சாம்பியன்ஷிப்பிற்கான ரசிகர் மண்டலமும் அடங்கும். எனவே சுவிட்சர்லாந்து இத்தாலிக்கிடையிலான காற்பந்து போட்டிகளை ஆயிரக்கணக்கானோர் வீட்டில் இருந்தே பார்க்கவேண்டியிருந்தது.

மேலும் பள்ளி மற்றும் கிராம நிகழ்வுகள் பாதிக்கப்பட்டது. மற்றும் வெளிப்புறத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வுகளும் இடைநடுவில் நிறுத்தவேண்டி ஏற்பட்டது.
இதுமாத்திரமின்றி விமான நிலையத்தில் சுமார் முப்பது விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு மேலும் சில விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
ஆனால் ஒட்டுமொத்தமாகஇ ஜெனீவா மீதான புயல் பயப்படுவதை விட குறைவான சேதத்தையே ஏற்படுத்தியிருந்தது.