சுவிட்சர்லாந்தில் யூலை முதலாம் திகதி முதல் ஒரு லிட்டர் பாலுக்கு நீங்கள் 3 சென்ட் அதிகம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சுவிஸ் பால் பண்ணையாளர்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் குடிப்பதற்கு உத்தேசித்துள்ள பால் மட்டுமே விலை உயர்ந்ததாக மாறும்; எனவும் பாலாடைக்கட்டி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பால் தயாரிப்பு விலை உயர்வால் பாதிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் யூலை மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் சில மருந்து பொருட்கள் உட்பட சில தொலைத்தொடர்பு சேவை கண்டங்களும் அதிகரிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.