தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சூரிச் விமானநிலையம்.!! தகவல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சூரிச் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.
புறப்படுவதோடு மட்டுமின்றி தரையிறங்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எத்தனை விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும் பல விமானங்கள் புறப்பட முடியாமல் விமான நிலையத்தில் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தரையிறக்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தொழில்நுட்ப கோளாறு தொடர்பான அறிக்கை இதுவரை விமானநிலையத்தினால் வெளியிடப்படவில்லை.
எனினும் இறுதியாக கிடைத்த தகவலின் படி மாலை 4:30 அளவில் ஒரு விமானம் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.